2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

’தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய என் இரத்தத்தால் கைச்சாத்திடுவேன்’

Gavitha   / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்த ஒரு கைதியின் விடுதலைக்காகவும், பத்திரங்களில் கைச்சாத்திடத் தான் தயாரில்லை எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, தனது இரத்​தத்தைக் கொண்டு கையொப்பம் இடவும் தயாரென்றார்.

இது தொடர்பாக விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவர், நாட்டில மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்போது துர்பாக்கியமான நிலை மைகள் பலவும் காணப்படுகின்றன. குறிப்பாக மலையகத்தில் இருந்து அதிகளவிலான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மறுமுனையில் கொரோனா வைரஸின் உக்கிர நிலை, வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தான் வாக்களித்துள்ளதாகவும் இந்தத் திருத்தத்தால், மலையக மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்காது எனத் தான் கருதியே, இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மலையக மக்களின் அபிலாசைகளுக்குப் புறம்பாக இருக்கின்ற எந்த விடயத்துக்கும், தான் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதோடு, மலையக மக்களுக்கு மனக்கசப்பு ஏற்படும் செயற்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .