2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

தலைமறைவாகியோரில் 1,131 இராணுவத்தினர் மீண்டும் இணைந்தனர்

Editorial   / 2017 ஒக்டோபர் 26 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்திலிருந்து தப்பியோடி, தலைமறைவாகியிருப்போரில், 1,131 பேர், கடந்த இரண்டு நாட்களில் மீண்டும் பணியில் இணைந்துகொண்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன, நேற்று (25) தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (25) நடைபெற்றது. 

இதன்போது, ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 

இராணுவத்தின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த 23ஆம் திகதி பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டது. அக்காலம், நவம்பர் 15 வரை அமுலில் இருக்கும்.  

இதேவேளை, சுமார் 30 ஆயிரம் இராணுவத்தினர், கடமைக்கு சமுகமளிக்காமலும் அறிவிக்காமலும் உள்ளனர் எனத் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .