2026 ஜனவரி 10, சனிக்கிழமை

’தவளை அரசியலை நான் மேற்கொள்ளேன்’

Editorial   / 2020 ஜூன் 17 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தான் விலகப்போவதாக வெளியாகும் செய்தி, திட்டமிடப்பட்ட பொய் என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், கொழும்பு மாவட்ட அரசியல் பிரமுகர்களின் இரகசியக் கும்பல்களால் நடத்தப்படும் இணையத்தளங்களில், சஜித்தை விட்டு மனோ விலகுகிறார் என்ற செய்தியொன்று, சிங்களத்தில் ​வெளியாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளதோடு, இது அப்பட்டமான பொய் என்றும் தெரிவித்துள்ளார்.

திடீர் திடீரென அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் பாயும் தவளை அரசியலை தான் மேற்கொள்ளவில்லை என்றும் சஜித் மீது நம்பிக்கை வைத்தே, தான் பயணித்து வருவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .