J.A. George / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாமரை கோபுரத்தின் திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.
தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகளுக்காக 2012ஆம் ஆண்டு சீனாவின் ALIT நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2 பில்லியன் பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் (16) கருத்து வெளியிட்டிருந்தார்.
தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை ஜனாதிபதி கூறியுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட நேற்று (17) கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று (18) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ஆம் திகதி தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஊடாக, பிரதான ஒப்பந்ததாரரான சைனா நெஷனல் இலக்ரோனிக் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு இரண்டு பில்லியன் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளாக அது தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தாமரை தடாகத்தின் நிர்மாண பணிகளில் தற்போதுவரை சைனா நெஷனல் இலக்ரோனிக் நிறுவனம் மாத்திரமே ஈடுபட்டு வருவதாகவும் குறித்த இரண்டு பில்லியன் ரூபாய் பணத்தை சீனாவின் ALIT நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஆரம்பம் முதல் இன்றுவரை அனைத்து கொடுப்பனவுகளும் பிரதான ஒப்பந்ததாரரான சைனா நெஷனல் இலக்ரோனிக் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு மாத்திரமே செலுத்தப்படுவதை ஆணவங்கள் உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
50 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
4 hours ago