2026 மார்ச் 02, திங்கட்கிழமை

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து முதலாவது கட்சித்தாவல்

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 11 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப  அமைச்சரான சுசில் பிரேமஜயந்த் இன்று (11) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவருடன் மேலும், 7 உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்  இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் எதிர்வரும் சில நாட்களில் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, தேர்தல் முடிவுகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளமைத் தொடர்பில்  அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை அலைபேசியில் அழைத்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .