2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’நாட்டுக்குள் தொற்று தீவிரம்’

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனைகளுக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

அத்துடன், நாளாந்தம் 1000 வரையில் பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட் பரவலைத் தடுக்கும் விசேட செயற்பாட்டு மய்யத்தால், நேற்று (23) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் குறித்த பரிசோதனையை விரிவுபடுத்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கமைய, ஆசிரி, நவலோக, டேடன்ஸ், லங்கா ஆகிய தனியார் வைத்தியசாலைகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதற்கமைய நாளாந்தம் 1,000 பரிசோதனைகளை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், வைத்தியசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட மய்யங்கள் ஆகியவற்றில் இருந்து தினமும் சுமார் 800 பேர் பரிசோதிக்கப்படுவதாகவும், அவர்களின் மாதிரிகளை அரசாங்கத் சுகாதாரத் துறை ஒவ்வொரு நாளும் பரிசோதித்து வருவதாகவும் கூறினார்.

“இந்நிலையில், அதிகமான மக்கள் தொற்றுநோயைக் கண்டறிய முடியும் என்ற நோக்கில் இந்த சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதையடுத்தே, கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பீ சி ஆர் பரிசோதனைகளுக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X