Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
றம்ஸி குத்தூஸ்
அடிப்படைவாத அமைப்புகளின் உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, தான் தலையிட்டதாக, வாக்குமூலமளித்துள்ள அந்த அதிகாரி, யாரென்று தெரியாது எனத் தெரிவித்த தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா, அவருடைய கூற்றை முற்றாக தான் கண்டிக்கின்றேன் என்றார்.
கொழும்பில், நேற்று (20) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மூன்று யோசனைகளில் இரண்டு நிறைவேற்றப்பட்டுவிட்டன. அதில், வடகிழக்கு பிரிப்பு முக்கியமானது என்றார்.
நான் யார் என்பது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். தனது நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில் அந்த பொலிஸ் அதிகாரி மேற்கண்டவாறு என்மீது குற்றஞ்சாட்டியுள்ளார் எனத் தெரிவித்த அதாஉல்லா, ஏதாவது ஆவணத்தையாவது காட்டியிருக்கலாமே. இல்லாத ஒன்றை இவர் எவ்வாறு கூறுவது. இதனூடாக, சரியான முறையில் தனது கடமையயைச் செய்யவில்லை என்பதுதான் புலப்படுகிறது என்றார்.
தான், தலையிட்டுள்ளதாக அந்த பொலிஸ் அதிகாரி, கூறுவதன் ஊடாக, இவர் அரசியல் கட்சியின் பின்னணியின் கீழிருந்து அவர் செயற்படுகின்றாரா? என்பது தொடர்பில் தனக்கு சந்தேகமுள்ளது எனத் தெரிவித்த அதாஉல்லா, இவ்வாறு அவர் கூறியிருப்பது மிகவும் தவறாகும் என்றார்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மூன்று விடயங்களை பிரதானமாக தேசிய காங்கிரஸ் முன்வைத்தது. அதில், பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல் முதலாவதாகும் வடகிழக்கு மாகாணங்களைப் பிரித்தல் இரண்டாவதாகுமெனத் தெரிவித்த அவர், நாட்டுக்குச் சிறந்தோர் அரசமைப்பை உருவாக்குதல் மூன்றாவது யோசனையாகும் என்றார்.
இதில் இரண்டு நிறைவேறிவிட்டன. நாட்டிக்குத் தேவையான அரசமைப்பை உருவாக்குவதே இன்றையத் தேவையாகும். அதனை, ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நாங்கள் தெரிவித்திருக்கின்றோம் என்றார்.
ஒன்பது மாகாணங்கள் மூன்று மாகாணங்களாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
“நாட்டில் மாகாணசபை முறைமை இல்லாதொழிக்கப்பட்டால் அது சிறப்பாக இருக்கும். மூவின மக்களுக்கும் அரசமைப்பில் முறையான திட்டத்தைகொண்டு உள்வாங்கி, சகலமக்களும் பிரச்சினையின்றி வாழக்கூடிய திட்டத்தை மேற்கொண்டால், மாகாணசபை தேவையில்லை” என்றார்.
அடிப்படைவாத அமைப்புகளின் உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அதனை எதிர்த்தார் என, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் எடிசன் குணசேகர, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை விசாரணைக்கு உட்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், அண்மையில் சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago