2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நேற்று மட்டும் 496 பேருக்கு கொரோனா

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 30 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று நேற்று மட்டும் 496 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 946ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 484ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 23,484 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பதிவான 496 தொற்றாளர்களில் 167 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், கம்பஹா மாவட்டத்தில் 56 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 53 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

மினுவங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,942 ஆக அதிகரித்துள்ளது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .