Kogilavani / 2021 ஜனவரி 20 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெய்யன்
கண்டி மடுல்கலை நெல்லிமலை தனியார் தோட்டத்தில், நேற்று இரவு முதல் பதற்ற நிலை நீடித்து வருவதாகவும் பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர்களின் வீடுகள் பல அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளொன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படித் தோட்டத்தில் பொங்கல் தினத்தன்று இடம்பெற்ற கோஷ்டி மோதலின் தொடர்ச்சியாக, நேற்று (19) தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளொன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago