2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை

நளினி மற்றும் முருகன் 5 நாள்களாக சிறையில் உண்ணாவிரதம்

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியும் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகனும்  5ஆவது நாளாக இன்று (02) உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி கடந்த 28ஆம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். 

தனது விடுதலையில் தாமதம் மற்றும் சிகிச்சைக்காக சென்னை வரும் கணவர் முருகனின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கவனித்துக் கொள்ள பரோல் கேட்டு அதிலும் தாமதம் என சில காரணங்களை முன்வைத்து அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். 

அத்துடன், அவர் தன்னை கருணைக் கொலை செய்யக்கோரி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதிவிட்டு சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார். 

அதேபோல் வேலூர் சிறையில் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகிய இருவர் துன்புறுத்தப்படுவதால் தங்களை புழல் சிறைக்கு மாற்றக்கோரியிருந்தார். அதனை சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. 

இதனால் தங்கள் இருவரையும் பெங்களூர் சிறை அல்லது வேறு மாநில சிறைக்கு மாற்றக்கோரி தமிழக உள்துறைச் செயளருக்கு மனு அவர் அனுப்பியுள்ளார். 

அதேபோல் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகனும் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.  சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நளினி, மற்றும் முருகனிடம் சிறை துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--