Editorial / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பரோலில் வெளியே வந்துள்ள நளினி, வேலூர் சிறையிலுள்ள முருகனை, இன்று (13) சந்தித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, மகளின் திருமண ஏற்பாடுகள் குறித்து இருவரும் மிகவும் உருக்கமாக கலந்துரையாடியுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, மகளின் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து, வேலூர் சத்துவாச்சாரியில் தங்கியுள்ளார்.
தினமும் அவர், சத்துவாச்சாரி பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
மேலும் சிறையில் இருக்கும்போது 15 நாள்களுக்கு ஒரு முறை, அவரது கணவர் முருகனை சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால் இப்போது பரோலில் வெளியே வந்து இருப்பதால், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, நளினி- முருகன் சந்திப்பை பொலிஸார் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் தனது மகள் ஹரித்திரா திருமண ஏற்பாடுகள் குறித்து, முருகனுடன் பேச வேண்டியுள்ளது என்று, சிறை அதிகாரிகளுக்கு, நளினி மனுவொன்றைச் சமர்ப்பித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்தே நளினி, முருகன் சந்திப்புக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
3 hours ago
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
7 hours ago