2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

நாடாளுமன்றத்தில் விஜயகலா-டக்ளஸ் கடும் வாய்த்தர்க்கம்

Super User   / 2010 ஜூலை 01 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம்  இடம்பெற்றது.

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த  விஜயகலா மகேஸ்வரன் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். எனினும் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் தங்களுக்கு தேவையானவர்களுக்கு மாத்திரமே பயன்களை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிட்டார். 

இதன்போது குறுக்கிட்ட டக்ளஸ் தேவானந்தா, நீங்கள் அப்படி யாரை குறிப்பிடுகின்றீர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விஜயகலா மகேஸ்வரன் அரசாங்கத்தில் பல கட்சிகள் இருப்பதாகவும் குற்றம் செய்தவர்களுக்கே உறுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒலி வாங்கி முடக்கிவிடப்படாத நிலையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.

கடும் வாய்த்தார்க்கத்தில் நீங்கள் தானே மகேஸ்வரனை  கொலை செய்தீர்கள் என்று டக்ளஸ் தேவானந்தாவை பார்த்து சிங்கள மொழியில் ஆவேசமாக குற்றஞ்சாட்டினார்.

இவர்கள் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற போது ஆளும் தரப்பினர் கூச்சலிட்டனர். பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதராவாக கூச்சலிட்டனர்.

விஜயகலா மகேஸ்வரனின் உரை முடிந்ததும் அவையிலிருந்த எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X