2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

நாடாளுமன்ற அமர்வின் பின்னர் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்

Super User   / 2010 மே 27 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி விஜயம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே மேற்படி விஜயம் குறித்த கலந்துரையாடலொன்று கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெறும் என  சற்று முன்னர் தமிழ்மிரர் இணையளத்திடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் வேளையில், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகள், புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும்  இளைஞர் யுவதிகளின் விடுதலை, சிறையிலுள்ள தமிழ் அரசியல்க் கைதிகளின் விடுதலை ஆகியன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேற்படி கலந்துரையாடலின் பின்னர் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் எனவும் பா.அரியநேந்திரன் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றவிருப்பதாகவும்  மேலும் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X