2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

நிறை குறைவான பாண்களை விற்பனை செய்த பேக்கரிகளுக்கு எதிராக நடவடிக்கை

Super User   / 2010 ஜூன் 24 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் 450 கிராம் நிறைக்கு  குறைவான பாண்களை விற்பனை செய்த 30 பேக்கரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தலைவர் ரூமி மர்சூக் டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களால் கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் மேற்கொள்ளப்பட தீடிர் சோதனையின் போதே  இது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், இது போன்ற இன்னும் பல தீடிர் சோதனைகளை அடுத்த சில நாட்களில் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, விலைப்பட்டியலை காட்சிக்கு வைக்காத கடைகளுக்கும் கட்டாய நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும்  ரூமி மர்சூக் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--