2026 மார்ச் 02, திங்கட்கிழமை

நீண்ட கால இடைவெளியின் பின்னர் மலையகம் சென்ற “கரி கோச்சி“

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 30 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரை “கரிகோச்சி“ புகையிரதம் தனது பயணத்தை இன்று பகல் ஆரம்பித்தது.

ஜெர்மன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் குறித்த புகையிரதம் பயணித்தை ஆரம்பித்தது.

கொழும்பு கோட்டையில் நேற்று (29)  தனது பயணத்தை ஆரம்பித்த குறித்த புகையிரதம் கண்டி புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டு இன்று அங்கிருந்து நானுஓயா வரை பயணத்​தைத் தொடர்ந்துள்ளது.

நாளைய தினம் (31) நானுஓயா புகையிரத நிலையத்திலிருந்து பண்டாரவளை நோக்கி பயணிக்கவுள்ளது.

குறித்த புகையிரதமானது இறுதியாக 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி பதுளை வரை பயணித்திருந்தது.

இன்று பயணித்த புகையிரதத்தைப் பார்ப்பதற்கு ஹற்றன் புகையிரத நிலையத்தில் பெருமளவிலான மக்கள் வருகைத் தந்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .