2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

நோன்புபெருநாள் வாழ்த்துகள்

Yuganthini   / 2017 ஜூன் 26 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

“உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள், சகோதரத்துவம், சமத்துவம், சகவாழ்வு ஆகிய உயரிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, நோன்புப் பெருநாளை வெகுவிமர்சையாகக் கொண்டாடுகின்றனர்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.   

அந்த வாழ்த்துச் செய்தியில், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  

“இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு மாதம் முழுவதும் உணவின்றி நோன்பு நோற்று, ரமழானைக் கழிக்கும் முஸ்லிம்கள் தமது சகோதர மக்களின் துன்பதுயரங்கள், தேவைகளை உணர்வுபூர்வமாக அணுகி, உதவிகள் வழங்கப்படவேண்டிய மக்களுக்கு தியாக உணர்வுடன் உதவியளித்து சகோதரத்துவம், சகவாழ்வைக் கட்டியெழுப்ப ரமழான் மாதத்தில் விசேட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.  

அவ்வாறே, இந்த நோன்பு காலத்தில் தனிப்பட்ட ரீதியிலும் சமூகரீதியாகவும் வளர்த்துக் கொள்ளும் உடல், உள அமைதித்தன்மை, கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பவற்றை மிகவும் சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்திக் கொள்வது முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.   

அந்த எதிர்பார்ப்பை யதார்த்தமாக மாற்றிக்கொள்வதற்கு இந்த நோன்புகாலத்தில் உடல் மற்றும் உளரீதியாக நாம் வளர்த்துக்கொள்ளும் பெறுமானங்களை வாழ்வின் அனைத்துச் சந்தர்ப்பத்திலும் பேணிக் கொள்ளவேண்டும்.  
இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து சகோதர முஸ்லிம்களுக்கும் சமாதானம், நல்லிணக்கம் மிகுந்த மகிழ்ச்சியான நோன்புப் பெருநாளாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .