2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

பணம் இல்லையெனக் கூறி பயணிகள் எதிர்ப்பு

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓமானிலிருந்து இலங்கைக்கு வந்த பயணிகள் சிலர், பிசிஆர் பரிசோதனை செய்ய தம்மிடம் பணம் இல்லையெனத் தெரிவித்து, கட்டுநாயக்க விமானநிலையத்தில் எதிர்ப்பினை முன்வைத்துள்ளனர்.

இன்று காலை 7.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 54 இலங்கையர்களும் தொழிலுக்காக ஓமானுக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 20 பேர் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையை செய்வதற்கு தம்மிடம் பணம் இல்லையென தெரிவித்து எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்ததாக, விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்த பயணிகளின் கோரிக்கையை ஆராய்ந்த அதிகாரிகள், விமான நிலையத்தில் அமைந்துள்ள இரசாயன பகுப்பாய்வு நிலையத்துக்கு இந்த பயணிகளை அனுப்பி அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .