Gavitha / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாய அமைச்சின் செயலாளர் பதவியை தாம் இதுவரை இராஜினாமா செய்யவில்லை என விவசாயம், மகாவலி, கிராமிய அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா தெரிவித்துள்ளார்.
இராஜினாமா தொடர்பில் இதுவரையில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், விவசாய அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான எண்ணம் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி P.B. ஜயசுந்தரவிடம் கடந்த 15 ஆம் திகதி தாம் தெளிவுபடுத்தியதாகவும் சுமேத பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
விவசாய அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து சுமேத பெரேரா இராஜினாமா செய்துள்ளதாக வௌியாகியுள்ள செய்தி தொடர்பில் தௌிவுபடுத்தும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
18 minute ago
40 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
40 minute ago
44 minute ago