Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாயின், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், சரியானவர்களை தெரிவுசெய்ய வேண்டுமென, கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில், பொத்துவில் ஊரணி கிராமிய மீனவர் அமைப்பு பிரதிநிதிகள் மத்தியில், இன்று (26) கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், மக்களின் பிரச்சினைகளை தீராதப் பிரச்சினைகளாக வைத்திருந்து, அதனோடு அரசியல் செய்கின்ற தரப்பினரின் கருத்துகளை நம்பி, தொடர்ந்தும் அவ்வாறானவர்களை மக்கள் தெரிவு செய்வார்களாயின், பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுமென, அவர் தெரிவித்தார்.
மேலும், ஊரணிப் பிரதேசத்தில், கரைவலை செயற்பாட்டை மேற்கொள்வதற்கான நிரந்தர அனுமதியை வழங்குவது தொடர்பில் பரிசீலிப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
ஊரணிப் பிரதேசத்தில், கரைவலையைப் பயன்படுத்துவதற்கு 2014 ஆண்டு வழங்கப்பட்ட தற்காலிக அனுமதியைப் பயன்படுத்தி, சுமார் 70 குடும்பங்ளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், அதனை அண்மித்த பிரதேசங்களில், கரைவலை செயற்பாட்டுக்கு நிரந்தர அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு இதுவரை குறித்த அனுமதி நிரந்தரமாக வழங்கப்படாமையால், நிச்சயமற்ற நிலையில் தாங்கள் இருப்பதாக, ஊரணி கிராமிய மீனவர் அமைப்பு பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
மேலும்> குறித்த பிரதேசத்தில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளும் தங்களுக்கு, மீன்பிடிப் படகு, வலை என்பவற்றை கொள்வனவு செய்வதற்கு, இலகு வழிமுறைகளை ஏற்படுத்தித்தர வேண்டுமென, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமை;ச்சர் டக்ளஸ் தேவானந்தா. விரைவில் குறித்த பிரதேசத்துக்கு நேரடியாக வருகைதந்து பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
எவ்வாறெனினும், அனைத்து விடயங்களையும் உடனடியாக நிறைவேற்றுவது சாத்தியமில்லையெனத் தெரிவித்த அவர், தேர்தல் நிறைவடைந்து, புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும்வரை பொறுத்திருக்க வேண்டும் என்றார்
4 minute ago
30 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
30 minute ago
34 minute ago
2 hours ago