2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

பேராயர் பால் ரிச்சர்ட்ஸ் வருகை தந்தார்

Janu   / 2025 நவம்பர் 03 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளியுறவு விவகாரங்களுக்கான வத்திக்கான் செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட்ஸ்  திங்கட்கிழமை (03) அன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட புனித பேராயத்தின் அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகரை, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்  அருண் ஹேமச்சந்திரா, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

இலங்கைக்கும் புனித பேராயத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்   விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய  மற்றும் அமைச்சர் ஹேரத்துடன் அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்துவார்.

இராஜதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் சிறப்பு நினைவு நிகழ்வு கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X