Gavitha / 2021 ஜனவரி 20 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியில் உறுப்பினர் பதவியை ஏற்க, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 6 மாதங்களுக்கு மேல் வெற்றிடமாகக் காணப்படும் இந்தத் தசியப் பட்டியில் உறுப்பினர் பொறுப்பை ஏற்குமாறு, கட்சியின் முன்னிலை உறுப்பினர்களான அகிலவிராஜ் காரியவசம், ரங்கே பண்டார போன்றவர்கள், ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று, கட்சியின் உயர்ப்பீடமும் அறிவித்திருந்தது.
விடுக்கப்படும் கோரிக்கைகள், அழுத்தங்கள் காரணமாக, தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியைப் பொறுப்பேற்க ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாகத் தெரியவருகிறது.
8 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 Jan 2026