2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பொலிஸாரின் துப்பாக்கிச் சந்தேக நபர் பலி

Editorial   / 2020 ஜூன் 07 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், பொலிஸாருடன் இடம்பெற்ற பரபஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

பாதாள உலகக் குழுவின் தலைவர் ஒருவர் உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மினுவங்கொடை பகுதியில் இன்று (07) அதிகாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேலியகொடை பிராந்திய குற்ற விசாரணை அதிகாரிளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்கேநபருக்கும் பொலிஸாருக்கும் இடையில் பரபஸ்பர துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இரத்மலானை – சொய்சாபுர பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் உள்ளிட்ட பல கொலைச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் குறித்த சந்தேகநபர் தேடப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

‘கொனாகோவிலே ராஜா’ என்றழைக்கப்பட்ட பத்திரனகே ராஜா விமலதர்ம என்பவரே துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .