2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

‘பள்ளிவாசல்களுக்கு வரவேண்டாம்’

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

மட்டக்களப்பு மாவட்டத்தில்,வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேண்டி பள்ளிவாசல்களை மூடி வைக்க பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.

அந்தவகையில், வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் தற்காலிகமாக யாரும் பள்ளிவாசல்களுக்கு வரவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தங்களுடைய தொழுகைகளை வீடுகளில் நிறைவேற்றிக் கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (24) ஆம் திகதியன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 11 பேர், மட்டக்களப்பில் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .