2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

பூவெலிகட சம்பவம் தொடர்பில் ஆராய விசேட பொலிஸ் குழு

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி , பூவெலிகடயில் இடிந்து வீழ்ந்த கட்டடம், உரிய நிறுவனங்களிடம் அனுமதி பெற்று நிர்மாணிக்கப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்ட போது, உரிய நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்ட அனுமதியை மீறியே, கட்டடத்தின் உடைந்த பகுதி நிர்மாணிக்கப்பட்டமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க கூறியுள்ளார்.

விசாரணை அறிக்கைககளுக்கமைய உரிய தரமின்றி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்படுமாயின், குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--