2026 மார்ச் 02, திங்கட்கிழமை

பிரித்தானிய இளவரசர் இலங்கையை வந்தடைந்தார்

Editorial   / 2018 ஜனவரி 31 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 70 வது சுதந்திர தின விழாவின் சிறப்பு அதிதியாகக் கலந்துக்கொள்ள பிரித்தானிய இளவரசர் எட்வர்டும், இளவரசி பொஷியும் இன்று பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று பகல் 12.40 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே. 348 என்ற விமானமூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

எதிர்வரும் 5ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள் கண்டி நாளைய தினம் தலதா மாளிகைக்கும், பேராதனை தாவரவியல் பூங்காவுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

அத்துடன், எதிர்வரும் 3ஆம் திகதி இரத்மலானையில் அமைந்துள்ள பார்வையற்றோர் பாடசாலைக்குச் சென்று மாணவர்களின் கலைநிகழ்வுகளில் பங்குகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .