Editorial / 2017 ஜூலை 04 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அரசாங்கத்தால், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘வலுக்கட்டாயமாகக் காணாமல் போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயம் எனும் சட்டமூலம்’ நாட்டுக்குப் பாதகமான மிகவும் பயங்கரமானதாகும்” என்று, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கெப்பட்டியாகொட சிரிவிமல தேரரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னரே ஜி.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“இந்தச் சட்டமூலத்தின் ஊடாக, இராணுவ வீரர் அல்லது அரசியல்வாதி, வெளிநாட்டு நீதிமன்றம் அல்லது வெளிநாட்டு அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு, அதனை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, அந்த நாட்டிடம், அந்நபரை ஒப்படைத்தல் அல்லது சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முடியும்” என்றும் ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பில், மாநாயக்க தேரர்கள் மற்றும் தேரர்களைத் தெளிவுப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இந்த சட்டமூலத்தில் உள்ள ஆபத்து தொடர்பில் மக்களுக்கு போதியளவில் தெளிவு இல்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago