2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

புதிய தேர்தல் நடைமுறையின் பிரகாரம் ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தேர்தல் நடைமுறையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

இந்த புதிய தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கையானது எதிர்வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்களின் பின்னர் இந்த தேர்தல் முறை மாற்றம் குறித்த யோசனைத் திட்டம் குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தினால் உத்தேசிக்கப்படும் இந்த புதிய தேர்தல் நடைமுறையின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் மறுசீரமைப்பு தொடர்பான உத்தேச சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட மா அதிபரினால் இது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய தேர்தல் முறைமையின் கீழ் 70 வீதமான உறுப்பினர்கள் தொகுதி வாரியாகவும், 30 வீதமான உறுப்பினர்கள் விருப்பத் தெரிவின் மூலமாகவும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதேவேளை, தேர்தல் தொகுதி மீள் நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X