Editorial / 2017 ஜூலை 12 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குரிய இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை, இலண்டனுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 15 மாதச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த, இராணுவத்தின் முன்னாள் வீரர் உள்ளிட்ட மூவரை, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று (12) விடுவித்தது.
இது தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்களான முல்லைத்தீவு - நந்திக்கடல் இராணுவ முகாமின் இலத்திரனியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவில் கடமையாற்றிய வவுனியாவைச் சேர்ந்த சுப்ரமணியம் நகுலராசா, வவுனியாவைச் சேர்ந்த ஜேசுரத்னம் ஜெகசாந்தன் மற்றும் மஹாதேவா பிரசன்னா ஆகிய மூவரும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே, அவர்களை நீதவான் விடுவித்தார்.
42 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago