Editorial / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
“19ஆவது சீர்த்திருத்தத்துக்கு பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை மீறி செயற்படும்போது பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதற்கான கோரிக்கைகள் வலுப்பெற்றுவரும் நிலையில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் பேச்சுவார்த்தை மூலமே இதற்கான தீர்வுகளை காணமுடியும்” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சர்வதேச நீர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01) நடைபெற்ற சர்வதேச நீர் கண்காட்சியில் அதிதியாக கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேலும் கூறியதாவது,
“19ஆவது சீர்த்திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் காணப்படும் சில பிரச்சினைகளை சீராக்கி, நிறைவேற்று அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு நாம் சில வழிமுறைகளை மேற்கொண்டிருந்தோம்.
அதனை திருத்துவதற்கு அவசியமிருந்தால் பேச்சுவார்த்தை மூலமே செய்யவேண்டும். விசேடமாக நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையே சமநிலை பேணப்படவேண்டியது நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியம் என நாம் கருதுகிறோம்.
நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றத்தை தாண்டிச் செயற்படும்போது பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனவேதான், அதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன.
19ஆவது சீர்த்திருத்தத்துக்கு பின்னர் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. அதுதொடர்பாக உரிய பேச்சுவார்த்தை நடாத்துவதே முன்னேற்றகரமானதாக இருக்கும்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்த முடியும்” என ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
19 minute ago
26 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
43 minute ago
2 hours ago