2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

பொன்சேகாவின் இரண்டாவது இராணுவ நீதிமன்றுக்கு எதிரான ரிட் மனு நிராகரிப்பு

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவினை மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராண்டாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்பட்டு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகாவினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவினை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், அதனை நிராகரித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X