2020 ஏப்ரல் 04, சனிக்கிழமை

முகாம்களிலும் வாக்களிப்பு நிலையங்கள்

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகாம்களில் தங்கியிருப்பவர்கள் தமது வாக்குகளை, தாம் தங்கியிருக்கும் இடங்களிலேயே அளிப்பதற்கான வாக்களிப்பு நிலையங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமைக்கப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த வாக்களிப்பு நிலையங்கள் நாடாளுமன்றச் சட்டத்தில் உள்ள விதிகளுக்கு அமைய அமைக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

இன்று  வவுனியாவில் நடைபெற்ற சர்வதேச தாய்மொழி தின நிகழ்வில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபருக்கும் 2 இடங்களில் வாக்களிக்க முடியாது. 2 இடங்களில் பதிவும் செய்ய வாய்ப்பும் இல்லை.  மிகவும் அரிதாக இரண்டு இடங்களில் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனாலும் 2 இடங்களில் வாக்களிக்கும் வாய்ப்பு எவருக்கும் இல்லை என்றும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .