Editorial / 2019 ஜூலை 13 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. விஜயரெத்தினம், வா.கிருஸ்ணா
வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி, வட-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால், மட்டக்களப்பு - காந்திபூங்காவில், இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் தொடர்ந்து தம்மை அரசாங்கம் ஏமாற்றிவருவதாகவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
இறுதி யுத்ததின்போது, தமது பிள்ளைகளை கைகளினால் படையினரிடம் வழங்கியபோதிலும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இன்று தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லையெனவும் தம்மை அனைவரும் கைவிட்டதாக தாங்கள் உணர்வதாகவும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025