Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
பேராதனை- பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகடிவதைக்கு உட்படுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கு நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரியால் இன்று (16) இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருப்பதற்கும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முதலாம் வருட மாணவர்களின் பெற்றோர்களே, படிகவதை தொடர்பில் முறையிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கவனம் எடுத்த பல்கலைக்கழக நிர்வாகம், ஆலோசனை சபையின் பரிந்துரைக்கமைய, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதென, பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பகடிவதையில் ஈடுபடும் மாணவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை விரிவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago