2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மத்திய கிழக்கிலிருந்து 188 பேர் வருகை

S. Shivany   / 2020 நவம்பர் 24 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல், மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 188 இலங்கையர்கள் இன்று(24) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 50 பேருடன், அபுதாபியிலிருந்து ஹிட்ஹாட் விமான சேவைக்குரிய  ஈ.வை-264 என்ற விமானம், இன்று அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது. 

அத்துடன், கட்டாரில் தங்கியிருந்த 48 இலங்கையர்கள், கட்டார் விமான சேவைக்குரிய கிவ்.ஆர்-668  என்ற விமானம் மூலம், இன்று அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

அத்துடன், மேலும் 90 இலங்கையர்கள் கட்டாரிலிருந்து இலங்கை விமான சேவைக்குரிய விமானம் மூலம், இன்று அதிகாலை 5.30 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த  இவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X