2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மனோவின் நம்பிக்கை

J.A. George   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் அந்தக் கட்சிக்குள் தற்போது சர்ச்சைக்குரிய நிலையொன்று தோன்றியுள்ளது.

அது தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடல்  வெற்றிப்பெறாத நிலையில்  கூட்டணி கட்சிகளில் தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் கருத்து வெளியிட்டிருந்தார்.

வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு தேசியப் பட்டியல் ஆசனமொன்று வழங்கப்படாவிட்டால்,  ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி கட்சிகள் மூன்றின் 15 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படபோவதாக தெரிவித்திருந்தார்.

குறித்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க இன்று வரை கால அவகாசம் வழங்குவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள மனோ கணேசன், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெறும் கூட்டத்தில் பிளவு ஏற்படாது என, தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--