கனகராசா சரவணன் / 2017 ஜூலை 07 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவின் கியூபெக் மாநிலத்திலுள்ள மொன்றியல் நகரத்திலுள்ள குடியிருப்பில் வைத்து, தனது மனைவியைக் மனைவியை கொலை செய்த இலங்கையரொருவர், இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்தை, வியாழக்கிழமை நள்ளிரவு வந்தடைந்த அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர் என, விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம், தனது 21 வயது மனைவியான அனுஜா பாஸ்கரனை கொலை செய்த குற்றச்சாட்டில், கனடாவில் நிரந்தரக் குடியுரிமையை பெற்ற இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் (31 வது) கனேடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கழுத்தில் 20 முறை குத்தப்பட்டிருந்த நிலையில், அனுஜா பாஸ்கரனின் சடலம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கனேடிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் அவரை நாடுகடத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து புதன்கிழமை கனடாவில் இருந்து அவரை இலங்கைக்கு விமான மூலம் நாடுகடத்தப்பட்டார். அவரை, குற்றத்தடுப்பு புலன்விசாரணை பிரிவினர் விசாரனை செய்து வருவதுடன், விசாரணைமுடிந்தவுடன் அவரை விடுவிக்கப்படுவார் டஎன, பொலிஸார் தெரிவித்தனர்.
41 minute ago
4 hours ago
01 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
01 Jan 2026