Nirshan Ramanujam / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியை சந்தித்திருந்தார். அது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவு ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

“அடுத்த டெஸ்டில், இலங்கை மீது சிறிது மென்மையாகச் செயற்படுமாறு, விராத் கோஹ்லியிடம் தெரிவித்தேன். 600 (ஓட்டங்கள்) என்பது சிறிது அதிகமானது” என்று குறிப்பிட்டிருந்ததார்.
இலங்கை அணிக்கெதிராக, இந்திய அணி, தொடர்ச்சியாக 600 ஓட்டங்களைப் பெற்று வருவதையே அவர் அவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
(தொடர்புடைய செய்தி : விமர்சனங்களை கணக்கில் எடுக்காதீர்கள்: அரவிந்த ஆலோசனை)
பிரதியமைச்சரின் இந்தப் பதிவுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்கள். அத்துடன் சமூக வலைத்தளங்களில் இந்த விடயம் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இது தொடர்பில் டுவிட்டர் பதிவினை செய்துள்ள பிரதியமைச்சர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார். அது, வெறும் கேலிக்கைக்காகவே தவிர எமது திறமையான வீரர்களை தைரியமிழக்கச் செய்யும் வகையில் பதிவிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago