Editorial / 2020 மே 14 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து பாவனையாளர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்களை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனங்களுக்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான ஆலோசனை வழங்கியுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையினால் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக ஒரே மின்சார கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு இடம்பெற்றுள்ள இந்தத் தவறை உடனடியாக நிறுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இரு மாதங்களுக்குமான மின் கட்டணங்களை செலுத்த மின் பாவனையாளர்களுக்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago