Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், தனக்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கொரு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின், சகலதையும் தெளிவுப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (20) அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை முற்றாக மறுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சமீர த சில்வாவின் கையொப்பத்துடன் இவ்வறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் முன்னிலையில், தான் தொடர்பில், முன்வைத்த கருத்துகளை நிராகரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கருத்துகள் பொய்யானவை, வெறுக்கத்தக்க அளவில் முன்வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராவதற்கான சந்தர்ப்பம், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தனக்கு கிடைக்குமாயின், சகல விடயங்களையும் தெளிவுப்படுத்துவதற்கு தான் தயாராகவிருப்பதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
39 minute ago
52 minute ago
1 hours ago