Editorial / 2017 ஜூலை 10 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் தான் அரசியல் தீர்வு என்று சம்பந்தன் பல தடவை அடித்து எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில், சிங்கள இனவாதம் வலுப்பெறாவிட்டால், தமிழ் மக்களின் கருத்துகள், நியாயங்கள் அரங்கேறிவிடும் என்பதற்காக சில சிங்கள இனவாத புத்திஜீவிகளின் கபட நாடகத்தின் நடிகர்கள் தான் இந்த மஹாநாயக்க தேரர்கள்” என, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளர் என்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“சிங்கக் கொடியை ஏற்றி ஒருமைப்பாட்டை வெளியிட்ட சம்பந்தனின் நல்லெண்ணத்தை மஹாநாயக்கர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நல்லாட்சியை ஏற்படுத்தும் பொழுது, தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கியதற்கான காரணம், புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வைக் காண்பது எனும் நம்பிக்கையிலேயேயாகும்.
“இன்று அரசாங்கத்துடன் அந்நியோன்யமாகப் பழகும் சுமந்திரன், புதிய அரசியலமைப்பில் வடக்கு - கிழக்கு இணைப்பு இடம்பெறாது என்று, தெளிவாகக் கூறியிருக்கின்றார். ரணில் அரசாங்கத்தின் உள்ளத்து உண்மையை அறிந்தவர் சுமந்திரன் மட்டும்தான். அப்படியானால் சிறுபான்மை மக்களுக்கு எதையும் கொடுக்காத அரசியலமைப்பை, ஏன் நான்கு பௌத்த பீடங்களின் மஹாகாநயக்கர்கள் எதிர்க்க வேண்டும். இது ஒரு மாயைத் தோற்றத்தைக் காட்டும் போலி நாடகமாகும்.
“திடீரென மஹாநாயக்கர்கள் மனம் மாறவில்லை. இதற்கு பின்னால், இந்த நல்லாட்சியின் அமைச்சர்களாக விளங்கும் சிலர் செயற்பட்டு வருகின்றார்கள்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago