Editorial / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இன்று 304ஆவதாக உறுதிபடுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மீன் வியாபாரி என பிலியந்தல சுகாதார சேவை வைத்திய அதிகாரி இந்திக எல்லாவல தெரிவித்துள்ளார்.
பிலியந்தல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் இவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குரிய அடையாளம் காணப்பட்டதையடுத்து, இன்று மாலை கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவ பீட வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் இவர் இன்று பகல் சென்ற குறித்த பிரதேசத்திலுள்ள சட்டத்தரணி, கிராம உத்தியோகத்தர் ஆகியோரின் வீடுகளிலுள்ள 11 பேரை சுயதனிமைக்குட்படுத்தியுள்ளதாகவும் இந்திக எல்லாவல தெரிவித்துள்ளார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025