Yuganthini / 2017 ஜூன் 19 , மு.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப்பெறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில், தொடர்ந்துரைத்த அவர்,
“வடமாகாண ஆளுநருடனான சந்திப்பின் போது, வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து ஆளுநர் விசாரித்தார்.
அத்துடன், அமைச்சர்கள் சிலரும், தங்கள் கருத்துகளை ஆளுநரிடம் தெரிவித்திருந்தார்கள். எவ்வாறாயினும், குறித்த அசாதாரண நிலைமைகள் தொடர்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்று, ஆளுநர் எம்மிடம் கேட்டுக்கொண்டார்.
விசாரணைக் குழுவினரால் குற்றமற்றவர்கள் எனக் குறிப்பிடப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்துக் கொள்வதுடன், மாகாண சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு, நாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இப்பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன்” என, மாவை எம்.பி, மேலும் குறிப்பிட்டுள்ளார்.
16 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago