2020 ஜூலை 11, சனிக்கிழமை

முறைப்பாடு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹா ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்ய, பொலிஸ் தலைமையகம் வழங்கியிருந்த கால அவகாசம் இன்றுடன் (12) நிறைவடையவுள்ளது.

இதற்கமைய, இன்று மாலை 4 மணிவரை, முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த மூவருக்கு எதிராக, நேற்றைய  தினம் வரை 11 முறைப்பாடுகள் கி​டைக்கப்பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ​ரிஷாட்டுக்கு எதிராக நேற்று (11) முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .