2026 ஜனவரி 10, சனிக்கிழமை

’யாழ்.ஜனாதிபதி மாளிகை சுற்றுலா விடுதியாகும்’

Editorial   / 2018 ஜனவரி 27 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

3.5 பில்லியன் ரூபாய் செலவில், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை, சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாளி​கை, தற்போது மூடப்பட்டுள்ளது. அதன் நன்மைகளை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அந்த மாளிகையை உயர்தரம் வாய்ந்த சுற்றுலா ஹோட்டலாக மாற்றுவதற்கு தற்போது சர்வதேச ரீதியாக விலைமனு கோரப்பட்டுள்ளது” என்று அவர்​ தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .