Gavitha / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், எம்.சி.சி அல்லது அதற்கு இணையான எந்தவோர் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படாதெனத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, இதனால் உலகின் எந்தவொரு நாட்டில் இருந்து எவர் வந்தாலும், குழப்பமடையத் தேவையில்லை என்றார்.
கொழும்பு - பிடகோட்டேயிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்துரைத்த அவர், கடந்த அரசாங்கம், சர்வதேசத்தின் முன் மண்டியிட்டிருந்தது. இதனாலேயே, கடந்த ஆட்சிக் காலத்தின் போது, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் வருகையின்போது தான் எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும் ஆனால், தற்போது அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வருகைக்காக எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.
எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என ஜனாதிபதி கடந்த அமைச்சரவையின் போது உறுதியளித்திருந்ததாகவும் இதனால் ஜனாதிபதி மீது முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மைக்கப் பொம்பியோவைச் சந்திப்பதற்கான தேவையொன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வுக்கு இருக்கவில்லை என்றும் அதனால்தான், அவர்கள் இருவருக்கும் இடையில் சந்திப்பொன்று நடக்கவில்லை என்றும், அமைச்சர் கூறினார்.
35 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
5 hours ago