2020 ஓகஸ்ட் 06, வியாழக்கிழமை

ரஞ்சன், ரஞ்சித், ராஜித ஆணைக்குழுவில் முன்னிலை?

Editorial   / 2020 ஜூலை 15 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார, ராஜித சேனாரத்ன ஆகியோர், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (15) முன்னிலையாகவுள்ளனர்.

கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டீ.கே.பி தசநாயக்கவால், குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காகவே இவர்கள் இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

2008ஆம் ஆண்டு,11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தில் போலி சாட்சிகளை உருவாக்கி, தனக்கு எதிராக, மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவித்து, டீ.கே.பி. தசநாயக்கவால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களான ரஞ்சித் மத்துமபண்டார, ராஜித சேனாரத்ன, அஜித்.பி.பெரேரா, டீ.எம். சுவாமிநாதன், ரஞ்சன் ராமநாயக்க,ஜே.சி.வெலியமுன மற்றும் குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ரவி வித்யாலங்கார  உள்ளிட்ட 6 பேரை இன்று விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு, இந்த மாதம் 6ஆம் திகதி அழைப்ப விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--