Editorial / 2019 ஜனவரி 20 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கிடையில் முன்னெடுக்கப்படும் இரகசிய முடிவுகளை செயற்படுத்த இடமளிக்கப்படாதென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த தெரிவித்துள்ளார்.
பெலியத்த நாகுலுகம மெத்தெனிய பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசமைப்பைக் காணாதவர்கள் நாட்டை பிரிப்பதாகத் தெரிவிக்கின்றனர். அரசமைப்புக்கு காரணம் தெரிவித்தவர்களே அவர்கள் தான். அது இப்போது அரசமைப்பே இல்லையென்கின்றனர்.சிலர் அதனை வரைவு என்கின்றனர். இது என்னவென்று ரணிலுக்கும் சுமந்திரனுக்கும் மாத்திரமே தெரியும். அவர்களிருவரும் இரகசியமாக மேற்கொண்டத் தீர்மானங்களை செயற்படுத்த பார்க்கின்றனர். நாம் அதற்கு இடமளிக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago