2026 ஜனவரி 10, சனிக்கிழமை

’ராம், நகுலனுக்கு கோட்டாபய பணம் கொடுத்தார்’

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ராம் மற்றும் நகுலன் ஆகியோருக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் சம்பளம் வழங்கப்பட்டதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவிய போது, புலிகள் இயக்கத் தலைவர்கள், கிழக்கு மாகாண மக்களின் வாக்குகளைத் தனக்கு சேகரித்துக் கொடுப்பதாகக் கூறியிருந்த நிலையிலேயே இந்தப் பணம் வழங்கப்படுவதாக பதிலளித்தாரென்றும், அமைச்சர் சம்பிக்க கூறினார்.

கொலன்னாவயில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வர்த்தகத் தொகுதிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர், கிழக்கில் பாரிய படுகொலைகளைச் செய்த ராம் மற்றும் நகுலன் போன்ற புலிகள் இயக்கத் தலைவர்களுக்கு, கோட்டாபய ராஜபக்ஷவினால் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபன், ராம், நகுலன் போன்றோர், மொனராகலை மற்றும் கதிர்காமத்தில், நூற்றுக்கணக்கான பொதுமக்களைப் படுகொலை செய்தவர்கள் என்றும் அவ்வாறானவர்கள் இன்றும் உயிரோடு உள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தினரால், தீவிரவாதிகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .