Editorial / 2017 செப்டெம்பர் 26 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியன்மார் றோகிஞ்சா அகதிகள் சிலரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலக பாதுகாப்பின் கீழிருந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அந்த தகவல் தெரிவித்துள்ளது.
பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவொன்று மேற்கொண்ட தேடுதலின் பின்னரே, அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த தகவல் மேலும் தெரிவித்தது.
இதேவேளை, மியன்மார் றோகிஞ்சா அகதிகளுக்கு, இந்நாட்டில் அடைக்கலம் கொடுப்பதற்கு, தன்னுடைய தலையீடு இருப்பதாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில், வெளியாகியுள்ள செய்திகளுக்கு எதிராக, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், குற்றப்புலனாய்வு பிரிவில் (சி.ஐ.டி) முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
18 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
33 minute ago