2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

விசாரணையில் திடீர் திருப்பம்

Nirosh   / 2020 டிசெம்பர் 05 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிஐடியினரால் நியமிக்கப்பட்டக் விசாரணைக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

12ஆகக் காணப்பட்ட இந்த விசாரணைக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் 78 பேரிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கலவரத்தால் உயிரிழந்த 11 பேரில், இருவர் மாத்திரம் இதுவரையில் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .